Posts

Showing posts from February, 2020
Image
கொங்கு வேளாள கவுண்டர் நடுகல் இந்த கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் சுமார் 500 ஆண்டு பழமையான  கல்வெட்டுடன்  கூடிய  நடுகல்லை  வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லேந்தி போரிடுவது போன்ற புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் மேற்புறம் 9 வரிகளில் கல்வெட்டு வரிகள் உள்ளன. இக்கல்வெட்டு தகவலின்படி தற்போது பனகமுட்லு என்று அழைக்கப்படும் இந்த ஊர் கடந்த 500 ஆண்டுக்கு முன்னர்  வண்ணக்கமுட்டல்  என்று அழைக்கப்பட்ட செய்தி தெரிய வந்தது. அப்போது இந்த ஊரின் மீது படையெடுத்து வந்த  மாமயதண்ணாக்கன்  என்பவரது படையை அழித்து, தானும் இறந்து போனார்  காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந்த அடியான் பணிக்கமாராயன்  என்பவரின் மகனான  படலன்  என்ற வீரன். இந்த வீரனது உயிர் தியாகத்தை போற்றும் வகையில்  கோவிந்தாண்டை  என்பவர் இந்த நடுகல்லை செதுக்கவைத்தார். இக்கல்லை  காணிக்காத்தான்  என்பவர் நட்டார். [2] இதில் ஆந்தை என்று வந்துள்ளது.இது ஆந்தை என்ற கூட்டத்தை குறிக்கும் அத்துடன் இந்த காமிண்டர் சொல் மர...